செய்திகள்

தல பட முன்னோட்டம் ஓக்டோபர் 1இல்

சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் புதிய படத்தின் முன்னோட்டம் வரும் ஒக்டோபர் 1 இல் வெளியாகிறது.

வீரம் படத்தைத் தொடர்ந்து சிவாவும் அஜீத்தும் இணையும் இரண்டாவது படம் இது. இப்படத்தில் அஜித்துக்கு தங்கையாக லட்சுமி மேனனும், ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார்.

விறுவிறுப்பாக உருவாகி வரும் இப்படத்தை தீபாவளி அன்று வெளியிட தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் முன்னோட்டத்தை ஒக்டோபர் மாதம் 1ம் தேதியிலும், பாடல்களை ஒக்டோபர் மாதம் இறுதியிலும் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெயரிடப்படாத இப்படத்திற்கு விரைவில் தலைப்பையும் அறிவிக்க இருக்கிறார் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்.