செய்திகள்

மஹிந்த குருநாகலில் போட்டியிடுவது ஐ.தே.கவுக்கு சவாலே அல்ல : எஸ்.பி.நாவின்ன

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதால் தங்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாதெனவும் அவரை தோற்கடித்து ஐக்கிய தேசிய கட்சி வெற்றிப் பெறுவது உறுதியானது எனவும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துக்கொண்ட எஸ்.பி.நாவின்ன தெரிவித்துள்ளார்.
தனது வேட்பு மனுவில் கையொப்பமிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே நாவின்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மஹிந்த தேர்தலில் போட்டியிட தீர்மானித்தமையினால் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் ஐக்கிய தேசிய கட்சியில் இணைய தீர்மானித்துள்ளனர். இதன்படி நானும் அதில் இணைந்துக்கொண்டு குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுகின்றேன். இந்நிலையில் மஹிந்தவும் அங்கு போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் அவர் எமக்கு சவாலே அல்ல அவரை தோற்கடித்து நாம் வெற்றிப்பெறுவது உறுதி என அவர் தெரிவித்துள்ளார்.