செய்திகள்

அடிப்படை மனிதஉரிமை மீறல் மனுவை சமர்ப்பித்த பிரசன்ன ரணதுங்க

மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று அடிப்படை மனித உரிமைமீறல் மனுவொன்றை கொழும்பு உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

நிதிமோசடி குற்றப்புலனாய்வு விசாரணை பொலிசார் தம்மை தரக்குறைவான விதத்தில் நடத்தியதாகவும் 500 மில்லியன் ரூபா மோசடியில் தம்மை குற்றவாளியாக்குவதாகவே விசாரணை இருந்தது என அவர் மனுவில் தெரிவித்துள்ளார்