குருநாகலில் போட்டியிட மகிந்தவே முடிவெடுத்தார்
‘எந்த மாவட்டத்தில் போட்டியிடலாமென மகிந்தவை கேட்டபோது தான் குருநாகலில் போட்டியிடலாம் என்று நினைக்கிறேன் என அவரே மாவட்டத்தை தெரிவுசெய்தார்’ இவ்வாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை ஊவபரணகம பிரதேசத்தில் நடைபெற்ற ஐக்கியமக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், சில ஊடகங்கள் மஹிந்த கூட்டணிக்குள் குழப்பம், சுதந்திரக்கட்சி உடைந்துவிட்டது என்றெல்லாம் பொய்யான செய்திகளை வெளியிடுகின்றன.
இதே எனது கிராமத்தில் கூறியிருந்தால் கன்னத்தில் அறைந்திருப்பேன். மஹிந்த குருநாகலில் ஐமசுமு வில் போட்டியிடுவது உறுதி என்றும் அவர் தெரிவித்தார்.




