செய்திகள்

மககளின் வரவேற்பில் தான் தெறி 2 ம் பாகம் உள்ளது…..!

விஜய் நடிப்பில் வெளிவரவுள்ள தெறி படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. இதன் கிளைமக்ஸ் காட்சியில் விஜய், எமி ஜாக்சன், நான் கடவுள் ராஜேந்திரன் மற்றும் விஜய்யின் மகள் திவ்யா ஆகியோர் மிகவும் சிறப்பாக நடித்துள்ளனர்.

விஜய் நடிப்பில் வெளிவரும் படம் என்றால், ரசிகர்களிடம் அதற்கிருக்கும் மதிப்பு குறித்து சொல்லத் தேவையில்லை. இந்நிலையில் தற்பொழுது வெளியாகியுள்ள டீசர் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதுடன் பல சாதனைகளையும் படைத்துள்ளது.

தெறி திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்பொழுதே இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து கதைக்கப்படுகின்றது. இதன் இரண்டாம் பாகம் உருவாக அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. வெளிவரவுள்ள தெறி படத்தில் இறுதியில் ‘மீட் யூ இன் தெறி 2′ என்று முடிவடைகின்றது. சிலர் இதனை வைத்து இரண்டாம் பாகம் நிச்சயம் வரும் என்று கூறுகின்றனர்.

எவ்வாறாயினும் தற்பொழுது வெளிவரவுள்ள படத்திற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்தே அதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்படுமா, இல்லையா என்ற முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகின்றது.

N5