பிரபு சொலமனின் கும்கி 2……!
கடந்த 2012-ம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த ‘கும்கி’ படம் தமிழில் சினிமா ரசிகர்களால் மாத்திரமன்றி அனைத்து மொழி பேசுபவர்களாலும் ரசனையுடன் பார்க்கப்பட்ட ஒரு படம்.
ஒரு யானைக்கும் பாகனுக்கும் இடையே இருந்த உறவையும், மலைவாழ் மக்களின் உணர்வையும் அழகாக எடுத்துச் சொல்லிய இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் மூலம், நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானார்.
இப்படத்தின் இயக்குனர் பிரபுசொலமன், தற்பொழுது தனுஷை வைத்து ‘மிரட்டு’ படத்தை எடுத்து வருகின்றார். அப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிக விருவிருப்பாக இடம்பெற்று வருகின்றன. இப்படத்தின் வெளியீட்டுடன் இயக்குனர் புதிய ஒரு தயாரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் சினிமாவில் மிகவும் பேசப்பட்ட ‘கும்கி’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க பிரபு சொலமன் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. ‘கும்கி’ இரண்டாம் பாகத்தில் முன்னணி நடிகர், நடிகைகள் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கும்கியைப் போன்றே சிறந்த தயாரிப்பாக அமையவிருக்கும் இப்படத்தில் எவ்வாறான நடிகர், நடிகைகள் உள்வாங்கப்படுவார்கள், படத்தின் கதை எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பிலான தகவல்களைப் பெற ரசிகர்கள் ஆவலாக உள்ளனராம்.
N5




