செய்திகள்
உள்ளூராட்சி மசோதா திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது
உள்ளூராட்சி சபை தேர்தல்களின் திருத்த மசோதா சில திருத்தங்களுடன் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
உள்ளூராட்சி சபையில் பெண் பிரதிநிதிகள் நூற்றுக்கு 25 வீதம் அதிகரிக்கப்படவேண்டும் என அதில் குறி்ப்பிடப்பட்டுள்ளது.
சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் பாராளுமன்றத்தில் தம்மை சுயாதீனமாக செயற்பட அனுமதிக்குமாறு வேண்டியதை தொடர்ந்து ஏற்பட்ட அமைதியின்மையினால் பாராளுமன்றம் நாளைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
n10




