செய்திகள்

வெல்லம்பிட்டியில் மூவர் சுட்டுக்கொலை: நள்ளிரவில் நடந்த பயங்கரம்

வெல்லம்பிட்டியவில் 20 வீட்டுத்திட்ட பகுதியில் மூவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த மூவரும் நேற்று நள்ளிரவு வேளையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெல்லம்பிட்டிய கித்தம்பஹுவ பகுதியைச் சேர்ந்த மூவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 19, 24 மற்றும் 49 வயதுடைய மூவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிப் பிரயோகத்தில் பலத்த காயங்களுக்குள்ளான மூவரும், தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபின்னர் உயிரிழந்துள்ளனர்.

இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.வெல்லம்பிட்டிய பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

R-06