செய்திகள்
இன்றும் சபை நடவடிக்கைகளை குழப்ப ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் திட்டம்
பாராளுமன்றத்தில் சுயாதீன குழுவாக தங்களை அங்கீகரிக்குமாறு இன்றைய தினமும் சபை நடவடிக்கைகளை குழுப்பி போராட்டங்களில் ஈபடுவதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் உள்ளுராட்சி தேர்தலில் பெண்களின் பிரதிநிதித் துவத்தை அதிகரிப்பதற்கான திருத்தச் சட்ட மூலம் மீதான விவாதத்தின் போது அதனை குழப்பும் வகையில் சபை நடுவே சென்று கூச்சலிட்டு ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அரசாங்கம் அந்த திருத்தச் சட்ட மூலத்தை கூச்சலுக்கு மத்தியிலும் நிறைவேற்றியது.
எவ்வாறாயினும் இன்றைய தினமும் அதேபோன்று அவர்கள் சபையில் குழப்பத்தை ஏற்படுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.




