ஐ.ம.சு.கூவை பிரித்த பாவச் சுமையை என்னால் சுமக்க முடியாது : ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கு சபாநாயகர் தெரிவிப்பு
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை சுயாதீன அணியாக அறிவித்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை பிரித்த பாவச் செயலுக்கு தன்னால் ஆளாக முடியாது என சபாநாகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நேற்று சபையில் தங்களை சுயாதீன அணியாக அறிவிக்குமாறு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்த போதே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சுயாதீன அணியில் கட்சிகள் இருக்க முடியாது. எவ்வாறாயினும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியென்ற பிரிவுக்கு நாம் முறையாக நேரத்தை ஒதுக்குகின்றோம். ஆனால் சுயாதீன அணியாக அறிவிப்பதில் சிக்கல்கள் உள்ளன. உங்களை அவ்வாறு அறிவித்து கூட்டணியை பிரித்த பாவத்தை என்னால் சுமக்க முடியாது. என அவர் தெரிவித்துள்ளார்.




