பிரியங்கா சோப்ராவின் புகழ்பாடும் முன்னாள் காதலன்: ஏன்தெரியுமா…
பொலிவூட் நடிகை ப்ரியங்கா சோப்ராவை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும் என பிரியங்காவின் முன்னாள் காதலன் ஷாகித் கபூர் கூறியுள்ளார்.
ஒரு காலத்தில் காதலர்களாக ஷாகித் கபூர் – ப்ரியங்கா சோப்ரா ஆகிய இருவரும் பொலிவூட்டில் வலம் வந்தார்கள்.
இவர்களுக்குள் ஏற்பட்ட மனகசப்பால் இருவரும் பிரிந்து விட்டனர். அதன்பின்னர், சில மாதங்களுக்கு முன்னர் மிரா என்பவரை ஷாகித் திருமணம் செய்து கொண்டார்.
அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஷாகித்திடம் ப்ரியங்கா பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது,
‘சர்வதேச நடிகையாக மாற ப்ரியங்கா சோப்ராவுக்கு எல்லாவிதமான தகுதிகளும் இருக்கிறது. அவரும் சிறப்பாக நடித்து வருகிறார். ப்ரியங்காவை எண்ணி நாம் பெருமைப்பட வேண்டும்’ என்றார்.




