செய்திகள்

43 இலங்கை அகதிகள் தாயகம் திரும்பினர்

இந்தியாவிலிருந்து  43 இலங்கை அகதிகள் தாயகம் திரும்பினர்.

திருச்சியிலிருந்து 12 அகதிகளும் சென்னையிலிருந்து 18 அகதிகளும் மதுரையிலிருந்து 13 அகதிகளும் நாடு திரும்பியதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்தது.

இவர்களுக்கான இலவச விமான பயணச்சீட்டுக்கள் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் ஊடாக பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.

வடக்கின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த 24 ஆண்களும் 19 பெண்களுமே நாடு திரும்பியுள்ளனர்.

தாயகம் திரும்பியவர்களுக்கு, ஆறு மாதங்களுக்குத் தேவையான உலர் உணவுப் பொருட்களை வழங்க மீள்குடியேற்ற அமைச்சினால் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் வேலாயுதம் சிவஞானஜோதி குறிப்பிட்டார்.

n10