செய்திகள்
மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரிகள் மூவரின் வங்கிக் கணக்குகளை சோதனையிட தீர்மானம் : தகவல் வழங்குமாறு 79 நிதி நிறுவனங்களுக்கு உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரிகள் மூவரினால் சேகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் நிதி மற்றும் சொத்துக்கள் தொடர்பான தகவல்களை நிதி விசாரணை பிரிவுக்கு வழங்குமாறு கொழும்பு பிரதான நீதவான் ஹிகான் பிலப்பிட்டிய இலங்கை வங்கி அடங்கலாக 79 நிதி நிறுவனங்களின் முகாமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி 32 வணிக வங்கிகள் மற்றும் 47 நிதி நிறுவனங்களில் சந்தேக நபர்களின் பெயர்களில் காணப்படும் கணக்கு மற்றும் சொத்துக்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு நீதவானால் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊழல் ஒழிப்பு குழுவின் செயலகத்தினால் இரகசிய பொலிஸாரிடம் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய நிதி விசாரணை பிரிவு இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சம்பந்தப்பட்ட நபர்களின் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் தொடர்பாக அறிவதற்காக நீதிமன்றத்தின் உதவியுடன் வங்கிகளில் தகவல்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதா தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறாக மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரிகளாக பணியாற்றிய வன்னி ஆராச்சி நெவில் , திஸ்ஸ விமலரட்ன , தமித் ஹோமிஸ் ஆகியோர் தொடர்பாக தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
n10




