முழு பாராளுமன்றத்திற்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது : பாராளுமன்ற செயலாளர் தெரிவிக்கின்றார்
சபாநாயகர் கருஜயசூரிய மீதான மரண அச்சுறுத்தல் முழு பாராளுமன்றத்திற்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே பார்க்க வேண்டியுள்ளதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை சபாநாயகருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பாக வரப்பிரசாத குழு கூடி விசாரணை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரை சுயாதீன குழுவாக அங்கீகரிக்குமாறு கோரி அந்த அணியினர் தனக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் எந்த அச்சுறுத்தலுக்கும் தான் அடிப்பணிய போவதில்லையெனவும் சபாநாயகர் நேற்று சபையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
R-06




