செய்திகள்

இராணு சிப்பாய்க்கு 17 வருட கடூழிய சிறை

இராணுவ சிப்பாய் ஒருவருக்கு 17 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இதற்கான தீர்ப்பை வழங்கினார்.

யாழ்ப்பாணம் மீசாலை இராணுவ முகாமில் இராணுவ சிப்பாய் ஒருவரைக் கொலை செய்ததுடன், மற்றுமொரு இராணுவ சிப்பாயைச் சுட்டுக்கொல்ல முயற்சித்தமைக்காக இவருக்கு இந்த தண்டணை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2002 ஆம் ஆண்டு எப்ரல் மாதம் 14 ஆம் திகதி சித்திரை புதுவருட தினத்தன்று மீசாலை இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ சிப்பாய் சந்திரசிறி என்பவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை மற்றுமொரு இராணுவ சிப்பாயான காவிந்த என்பவரை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

n10