செய்திகள்

29ஆம் சட்ட மா அதிபராக ஜயந்த ஜயசூரிய பதவிப் பிரமாணம்

இலங்கையின் 29ஆம் சட்ட மா அதிபராக சிரேஸ்ட சொலிசுட்டர் ஜெனரல் ஜயந்த ஜயசூரிய இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜயந்த ஜயசூரிய பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஜயந்த ஜயசூரியவை சட்ட மா அதிபராக நியமிக்குமாறு அரசியலமைப்புப் பேரவை நேற்று பரிந்துரை செய்திருந்தது.

இந்த பரிந்துரைக்கு அமைய ஜனாதிபதி மைத்திரியின் முன்னிலையில் ஜயந்த ஜயசூரிய இன்று சட்ட மா அதிபராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

n10