செய்திகள்
பன்னிரெண்டு தமிழக மீனவர்களுக்கு பெப்ரவரி 25 வரை விக்கமறியல்
இலங்கை கடற்பரப்பினுள் சட்டவிரோதமாக நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் 12 தமிழக மீனவர்களை இன்று வியாழக்கிழமை மன்னார் மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 25 திகதி வரை விளக்கமறியலில்வைக்க மன்னார் மாவட்ட நீதவான் ஆசீர்வாதம் கிறெசியன் அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டார்.
நேற்று பதன்கிழமை இரவு இலங்கை கடற்பரப்பினுள் சட்டவிரோதமாக நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் 12 தமிழக மீனவர்களை தலைமன்னார் கடற்படையினர் கைது செய்திருந்ததுடன் அவர்கள் கடற்றொழிலுக்கு பயன்படுத்திய படகு இரண்டினையும் கைபற்றியிருந்தனர்.
இந்நிலையில் அவர்களை இன்று காலை பொறுப்பேற்றுகொண்ட கடற்றொழில் நீரியல வள திணைக்கள அதிகாரிகள் விசாரணைசெய்து பதிவுகளை மேற்கொண்டபின்னர் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தியபோதே குறித்த உத்தரவை நீதவான் பிறப்பித்தார்.





