செய்திகள்

தனி அரசு ஒன்றை உருவாக்குவதற்காக ஆயுதமேந்தி போராடியவர்கள் அதற்கு நிகரான தீர்வையே எதிர்பார்ப்பார்கள்: முன்னாள் எம். பி சந்திரகுமார்

வடக்கு, கிழக்கு மக்கள் ஒரு தனி அரசு ஒன்றை உருவாக்குவதற்காக ஆயுதமேந்தி போராடியவர்கள். அதற்காக பலதியாகங்களைச் செய்திருக்கின்றார்கள். இன்றைக்கு தீர்வு என்று சொல்லும்போது அதற்கு நிகரான தீர்வைத்தான்அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒன்பதாம் திகதி கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற புதிய அரசியலமைப்பு உருவாக்கம்தொடா்பில் மக்கள் கருத்தறியும் நிகழ்வில் கமூக மேம்மாட்டு அமையத்தின் சார்பில் யோசனைகளை முன்வைக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசியல் அமைப்பு மாற்றம் 2016 ஆம் ஆண்டில் கொண்டுவரப்படுமா? என்பது தொடர்பாக பொதுவாக மக்கள்மத்தியில் சந்தேகம் இருக்கிறது. இருந்தாலும் நாங்கள் இந்த விடயத்தை பாராட்டுகின்றோம். மக்கள் அமைப்புகள்,தனிநபர்கள் எல்லோரது கருத்துக்களையும் கேட்டறியும் இந்த முயற்சியை நாங்கள் பாராட்டுகின்றோம். இது சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக இடம்பெறுகிறது.

கடந்த காலங்களில் அரசியலமைப்பு மாற்றங்கள் கொண்டுவரப்படும்போது அரசியலமைப்பு முறைமைகளில் துறைசார்நதவா்களின் கருத்துகள் மட்டுமே பெறப்பட்டு புதிய அரசியலமைப்பு மாற்றங்கள், திருத்தங்கள் கொண்டுவந்ததால் அதனுடைய தாக்கத்தை இந்த நாடு இன்று உணர்ந்துள்ளது. அதனால், பல்வேறுநெருக்கடிகளையும், யுத்தத்தையும், பாதிப்புகளையும் நாடு எதிர்கொண்டது. அந்த அனுபவங்களின் வாயிலாக இப்போது மக்கள் எல்லோரையும் இந்த அரசியலமைப்பு சீர்திருத்த ஆலோசனையில் இணைத்து அவர்களதுகருத்தைகளையும் உள்வாங்கி ஒரு பூரணமான தெளிவான அரசியலமைப்பு முறையை கொண்டுவருவதை நாம்வரவேற்கின்றோம்.

ஆனால், இது இலகுவான விடயம் அல்ல என்பதனையும் நாங்கள் புரிந்திருக்கின்றோம். ஏனென்றால், இங்கேமக்கள் குறிப்பாக, நான் இந்த கிளிநொச்சி மாவட்டத்தின் மக்கள் சார்பாக சொல்லுவதானால், இந்த மாவட்டம் இனமுரண்பாடு அல்லது யுத்தம் காரணமாக பல்வேறு அழிவுகளைச் சந்தித்த மாவட்டம். இந்த அழிவு இந்த மக்கள்மத்தியில் அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அழிவுகள், நெருக்கடிகள் காரணமாக அரசுகள் மீது ஒரு நம்பிக்கையற்ற தன்மையையே நாம் காண்கின்றோம். ஏராளமான வலிகளைச் சுமந்த மக்கள் என்கின்ற அடிப்படையில்அவர்களுக்கு நிறைய சந்தேகங்களும், அவநம்பிக்கையும் இந்த அரசியலமைப்பு, அரசுகள் மீது இருக்கின்றது.அதனால், இந்த மக்களின் உண்மையான உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பது அரசியலமைப்புதிருத்தத்தில் முக்கியமான விடயமாக நான் கருதுகின்றேன்.

எனவே அவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். என நான் நினைக்கின்றேன் யுத்தம் முடிவடைந்து ஆறுவருடங்கள் ஆகிவிட்டது. இப்போதுதான் நாம் தீர்வு தொடர்பாக மக்கள் கருத்துகளைக் கேட்கின்றோம். வடக்கு,கிழக்கு மக்கள் ஒரு தனி அரசு ஒன்றை உருவாக்குவதற்காக ஆயுதமேந்தி போராடியவர்கள். அதற்காக பலதியாகங்களைச் செய்திருக்கின்றார்கள். இன்றைக்கு தீர்வு என்று சொல்லும்போது அதற்கு நிகரான தீர்வைத்தான்அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

நீண்டகாலமாக தனி தேசம் ஒன்றை அமைப்பதற்காக பல தியாகங்களைச் செய்தவர்கள். ஆகவே, மக்களின் அந்தஉணர்வுகளை ஒட்டுமொத்தமான இலங்கையும், அரசியல் தரப்புகளும் புரிந்துகொள்ள வேண்டும். அதனால்தான்மக்கள் தீர்வைப் பற்றி பேசும்போது ஆக அதி உச்ச அதிகாரங்களுடைய ஒரு அலகைத்தான் எதிர்பார்க்கின்றார்கள்.அதுவும் வடக்கு, கிழக்கு என்பது தமிழர்களின் பூர்வீக தாயகப் பிரதேசத்தை உள்ளடக்கிய காணி பொலீஸ் அதிகாரங்களை கொண்ட ஆகக்கூடிய அதிகாரப் பரவலாக்கல் பெறக்கூடிய ஒரு அலகைத்தான் மக்கள்எதிர்பார்க்கின்றார்கள். அது பிராந்திய அலகாக இருந்தால் என்ன, மாகாண சபையாக இருந்தால் என்ன அதுஅதியுச்ச சபையாக இருக்க வேண்டும் என்றுதான் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். அதற்கு முன்பு இதுவிவாதிக்கப்படும்போது நடைமுறையில் கொண்டுவரலாமா என்பது தொடர்பான வலுத்த சந்தேகங்கள், சூழல்கள்இருக்கின்றன. ஏனென்றால், பாராளுமன்றத்தின் புதிய அரசியலமைப்பு எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடியவகையில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மை நிறைவேற்றப்பட வேண்டும். அடுத்தகட்டமாக நாடுதழுவியரீதியில் சர்வஜன வாக்கெடுப்புக்கு கொண்டுசெல்ல வேண்டும். மிகவும் நெருக்கடியான, சவாலான விடயங்கள்இவை.

அதற்கு முன் தேசிய நல்லிணக்கம் என்று நாம் உச்சரிக்கின்றோம். அநேகமாக எல்லாத்தரப்புகளும் தேசியநல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும். சர்வதேச நாடுகள் கூட இதனை வலியுறுத்துகின்றன. இலங்கைஅரசியலில் இது தினமும் பேசும் பொருளாக தேசிய நல்லிணக்கம் உள்ளது. ஆனால், நடைமுறையில் எந்தளவில்நல்லிணக்கத்தை உருவாக்குவதற்காக நடைமுறைச் செயற்பாடுகள் இருக்கின்றன? என்பது சந்தேகமே. வெறும்சுந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதத்தை படித்துவிட்டால் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்திவிட்டோம் என்றுசொல்லுவதை தமிழ் மக்கள் நம்புவதற்கு தயாராகயில்லை.

வடக்கு, கிழக்கிலே குறிப்பாக, கிளிநொச்சி மாவட்டத்திலே இன்னும் இந்த மக்கள் தாம் ஒரு சுற்றிவளைப்புக்குள்இருக்கின்றோம் என்ற உணர்வில்தான் இருக்கின்றார்கள். சுற்றிவளைப்புக்குள் கண்காணிக்கப்படுகின்றோம்,இரண்டாம்தர பிரஜையாக இருக்கின்றோம் என்ற உணர்வில்தான் இருக்கின்றார்கள். அந்தளவிற்கு மக்களின்வாழ்விடங்கள் மற்றும் நாளாந்த செயற்பாடுகளுக்கு இராணுவப் பிரசன்னம் ஒரு இடையூறாக இருக்கின்றது.இராணுவ குடியிருப்புகள் முக்கியமாக பாடசாலைகளுக்கு அருகாமையில், கோயிலுக்கருகாமையில், மக்களின்விளைநிலங்கள் என்பன இராணுவத்தினரின் பிடிக்குள் இருக்கின்றது. ஆகவே, இப்படியான சூழல்களைஉருவாக்கிக்கொண்டு தமிழ் மக்களிடமிருந்து தேசிய நல்லிணக்கம் தொடர்பான ஒரு சமிக்ஞை கிடைக்கும் என்றுஎதிர்பார்க்க முடியாது.

அரசியலமைப்பு மாற்றத்தை கொண்டுவருவதற்கு முன்பு, தமிழ் மக்களின் நம்பிக்கையை நல்லிணக்கமாக வென்றெடுப்பது ஆட்சியில் ஒரு முக்கிய விடயமாகும். அதுபோல அபிவிருத்தி சமநிலையையும் விரைவாகஉருவாக்க வேண்டும். தெற்கில் ஏற்படுத்தப்பட்ட அபிவிருத்தி மாதிரி இந்த மக்களின் வாழ்நிலை மேம்பாடு, பிரதேசஅபிவிருத்தியை விரைவாக முன்னேற்ற வேண்டும். சமனான அபிவிருத்தி சமநிலையை உருவாக்கிக்காட்டினால்தான் தேசிய நல்லிணக்கம் என்ற நம்பிக்கையை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். தேசியநல்லிணக்கம் என்பது அவசியம் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் நம்பிக்கைகளை ஏற்படுத்தவேண்டும்.

எங்களுடைய சமூக மேம்பாட்டு அமையம் சமர்ப்பித்தது ஒரு முழுமையான நிபுணத்துவ அறிக்கையல்ல.

அதில் நாங்கள் முக்கியமான அடிப்படைகளை வலியுறுத்தியிருக்கின்றோம். குறிப்பாக, அதிகார பரவாக்கல் அலகுஎப்படி அமைய வேண்டும் என்று சொல்லியிருக்கின்றோம். இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தைப் பற்றிசொல்லியிருக்கின்றோம். மொழி, மத சுதந்திரங்களைப் பற்றி சொல்லியிருக்கின்றோம். குறிப்பாக, இந்தபகுதியிலே இருக்கக்கூடிய மலையகத்தில் இருந்து இடம்பெயர்ந்து இங்கே வாழ்கின்ற மக்களின் வாழ்நிலைமேம்பாடு அல்லது அவர்களுக்கான ஒரு தனி பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என்பதனைவலியுறுத்தியிருக்கின்றோம். அது மிக மிக முக்கியமானது. ஏனென்றால், நாங்கள் தனியான மலையக மக்களுக்கான உள்ளக அலகொன்றை தேடவில்லை. ஆனால் அவர்களின் மேம்பாட்டுக்கான உத்தரவாதம்உறுதிசெய்யப்பட வேண்டும் என்பதைத்தான் நாங்கள் வலியுறுத்தியிருக்கின்றோம்.