செய்திகள்

முல்லை அம்மாள்புரத்தில் காட்டு மரங்கள் கடத்தல்

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள அம்பாள்புரம் பகுதியில் பெறுமதியான காட்டுமரங்கள் கடத்தப்பட்டு வருவதாகவும் இதனை கட்டுப்படுத்துவதற்கு உரிய அதிகாரிகள் எவரும் நடவடிக்கை எதனையும் எடுப்பதில்லை எனவும் இப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாந்தைகிழக்கு பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள அம்பாள்புரம், பகுதியில் கிராம அலுவலர் மற்றும் அதிகாரிகளின் துணையுடன் பெறுமதி வாய்ந்த காட்டுமரங்;கள் வெட்டப்பட்டு வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

குறித்த பகுதியில் மரங்கள் வெட்டப்படுவது தொடர்பாகவும் இவற்றைக்கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றபோதும் இன்றுவரை எந்த அதிகாரிகளும் இதனைக்கட்டுப்படுத்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ள இப்பகுதி மக்கள் இவற்றைக்கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இப்பகுதி கிராம அலுவலரின் முழுமையான ஆதரவுடன் குறித்த பகுதியில் இருந்து மரங்கள் வெட்டப்பட்டு கனரக வாகனங்களில் வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் குறித்த கிராம அலுவலர் அரசியல் கட்சியொன்றின் ஆதரவுடன் குறித்த வேலைகளை செய்து வருவதாகவும் இவ்விடயம் தொடர்பாக எந்த நடவடிக்கைகளையும் உரிய அதரிகாரிகள் மேற்;கொள்ளாமை பல்வேறு தரப்பினரிடத்திலும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.