செய்திகள்
டக்ளஸ் தேவானந்தா-ஐக்கிய அமெரிக்க நாட்டு தூதரகத்தின் பிரதித் தூதுவர் சந்திப்பு
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களை இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்க நாட்டு தூதரகத்தின் பிரதித் தூதுவர் சந்தித்து கலந்துரையாடினார்.
கொழும்பில் அமைந்துள்ள டக்ளஸ் தேவானந்தா அவர்களது வாசஸ்தலத்தில் இச்சந்திப்பு இன்றைய தினம் (11) இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பின்போது புதிய அரசியல் அமைப்பு விடயம் தொடர்பாகவும், கட்சியின் நிலைப்பாடு தொடர்பாகவும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டு கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டதும் நிகழ்காலங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் மக்கள் நலன்சார்ந்த செயற்திட்டங்கள் தொடர்பாகவும் தூதரகத்தின் பிரதித் தூதுவருக்கு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெளிவுபடுத்திய அதேவேளை எதிர்காலங்களில் கட்சியினூடாக முன்னெடுக்கப்படவுள்ள வேலைத் திட்டங்கள் தொடர்பிலும் விளக்கமளித்தார். 

அமெரிக்க தூதரகம் சார்பில் இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்க நாட்டு தூதரகத்தின் பிரதித் தூதுவர் அன்ட்ரூ மான் (Andrew Mann) மற்றும் அமெரிக்க தூதரகத்தின் அரசியல் பிரிவின் தலைவர் ஹெலி பிலிங்ஸ்லி (Kelly Billingsley), அரசியல் ஆய்வாளர் சந்தீப் குரூஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
n10




