அரச வைத்தியசாலைகளில் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு…..!
நாட்டில் அரச வைத்தியசாலைகளில் முக்கிய மருந்து வகைகள் பலவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறாக 100 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலுதவி ஊசி மருந்துகள் , சிறுவர் நோய்கள் தொடர்பான ஊசி மருந்துகள் , சத்திரச் சிகிச்சைகளின் போது பயன்படுத்தும் மருந்து வகைகள் போன்ற வற்றுக்கு இவ்வாறாக தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் மலேசியா , இந்தியா , பங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து அரசாங்கம் மருந்து வகைகளை கோரியுள்ளதுடன் அவை இலங்கைக்கு வந்து சேர மூன்று வாரங்களாவது செல்லும் என தெரிவிக்கப்படுகின்றது.




