குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்வதற்கும் தயார்: மீண்டும் சொல்கிறார் மஹிந்த!
பத்தரமுல்லவில் தனது புதிய அரசியல் கட்சி அலுவலகத்தினை திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
வெளிநாட்டு வங்கிகளில் தாம் பாரியளவில் பணம் பதுக்கி வைத்துள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
தாம் இவ்வாறு பணம் பதுக்க வைத்திருப்பதாக குற்றம் சுமத்துவோர் அது குறித்த ஆதாரங்களை முதலில் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமது ஒரு புதல்வர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும், மற்றுமொரு புதல்வர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
n10




