செய்திகள்

வவுனியா நீதிமன்ற வளாகத்தில் 21 வழக்குகளுடன் தொடர்புபட்டவர்கள்சமுதாயச்சீர்த்திருத்தப்பணிகளில்

வவுனியா நீதிமன்ற வளாகத்தின் பல்வேறு வழக்குகளுடன் தொடர்புபட்ட 21 பேர் 1999ம் ஆண்டின் 49ம் இலக்க சமுதாயம் சார் சீர்திருத்த சட்டத்தின் கீழ் சமுதாய சீர்த்திருத்தப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என சமுதாயம் சார் சீர் திருத்த திணைக்களத்தின் வவுனியா மாவட்டப்பணிப்பாளர் எம்.நஜீம் தெரிவித்துள்ளார்.
வவுனியா நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் குடிபோதையில் அசௌகரியமாக நடந்துகொண்டமை, மக்கள் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தமை, சட்டவிரோதமான முறையில் கசிப்பு வைத்திருந்தமை தொடர்பாக கைது செய்யப்பட்டோர் வவுனியா நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் சமுதாயம் சார் சீர்திருத்த திணைக்களத்தின் ஊடாக நீதிமன்ற உத்தரவிற்கமைவாக சமுதாயம் சார் சீர்திருத்தப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
நீதிமன்றத்தினால் மறியல் தண்டணைகள் விதிக்கப்படுவதற்கு பதிலாக அவர்களை சமுதாயம் சார் சீர்திருத்தப்பணிகளில் ஈடுபடுத்துவதுடன் அவர்களுக்கான தொழில் சார் வழிகாட்டல்கள் உளவியல் வகுப்புக்கள் என்பவற்றையும் வழங்கி அவர்களை சமுகத்தில் நற்பிரிஜைகளாக வாழ வைப்பதற்கு சமுதாயம் சார் சீர்திருத்த திணைக்களம் அறிவுரைகளை வழங்கி வருகின்றது.
அந்த வகையிலேயே கடந்த ஜனவரி மாதத்தில் வவுனியா நீதிமன்ற வளாகத்தில் 21 வழக்குகளுடன் தொடர்புபட்டவர்கள் 1999ம் ஆண்டின் 49ம் இலக்க சமுதாயம் சார் சீர்திருத்த சட்டத்தின் கீழ் சமுதாயச்சீர்த்திருத்தப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என சமுதாயம் சார் சீர் திருத்த திணைக்களத்தின் வவுனியா மாவட்டப்பணிப்பாளர் எம்.நஜீம் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.
n10
n10