கடற்படையினர் தமிழர்கள் நியாயமான முறையில் தொழில் செய்ய அனுமதிப்பதில்லை:சாள்ஸ் நிமலநாதன்
மன்னார் பள்ளிமுணை மீனவர்கள் மனிதாபிமானமற்ற வகையில் தான்தோன்றிதனமாக கடற்படையினரினால் தாக்கப்பட்ட சம்பவத்தை வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிமலநாதன் வன்மையாக கண்டித்துள்ளார்.
தலையில் கத்தி வெட்டுக்குள்ளாகி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் உள்ள யேசு ரஞ்சித் (றோபின்) னை இன்று ஞாயிற்றுகிழமை (14) நேரில் சென்று பார்வையிட்ட வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிமலநாதன் மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ளார்.
இது தொடர்பாக கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மன்னார் பள்ளிமுணை சேர்ந்த மீனவர்கள் நான்குபேர் இரணதீவு கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்த கடற்படையினர் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த இருவரை தாக்கியதுடன் கத்தியினால் கொடுரமான முறையில் வெட்டியுமுள்ளனர். ஏணைய இருவரையும் கைது செய்து பொலிசில் தடுத்துவைத்துள்ளனர்.
கடற்படையினரினால் தக்கப்பட்ட சம்பவம் நாட்டில் நல்லாட்சி நடைபெறுவதாக அரசு கூறிவரும் பொய் பிரச்சாரத்தை கோடிட்டு காட்டுகிறது.
வட பகுதியில் தமிழ் செறிந்து வாழும் பகுதியில் கடற்கரை ஓரங்களை ஆக்கிரமித்துள்ள தென்பகுதி மீனவர்கள் சட்டவிரோதமான முறையில் கடற்றொழிலில் ஈடுபடும்போது வாய் மூடி மௌனிகளாக இருக்கும் கடற்படையினர். நியாயமான முறையில் தமிழர் தாயக பகுதியில் கடற்றொழிலில் ஈடுபடும் வட பகுதிமீனவர்களை தமிழர்கள் என்கின்ற காரணத்திற்காய் தாக்குவதும் அச்சுறுத்துவதும் தொடர்கிறது.
நேற்று இரணதீவு பகுதியில் அட்டை பிடிப்பதற்கான கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த இரு மீனவர்கள் மிக மோசமாக தாக்கப்பட்டுள்ள சம்பவத்தை தமிழ் தேசிய கூட்டப்பு மிக வன்மையாக கண்டிக்கின்றது.
நல்லாட்சியில் சட்டம் நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது என்றால் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்கள் தவறு இழைத்திருந்தால் அவர்களை கடற்படையினர் கைது செய்து பொலிசாரிடம் ஒப்பத்திருக்கவேண்டும்.
ஆனால் சட்டத்தை மீறும்வகையில் கடற்படையினர் சிவில் உடையில் முகங்களை மறைத்து முகமூடியணிந்தவாறு குறித்த இரு மீனவர்களையும் கண்மூடித்தனமாக கொடுரமாக தாக்கி கத்தியினால் வெட்டியும் உள்ளனர்.
இது நாட்டில் சட்டம் நீதி எவ்வாறு செயற்படுத்தப்படுகிறது என்பதை வெளிப்படையாகவே காணக்கடியதாக உள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கின்றேன். அது தொடர்பாக பொஸ் மா அதிபருக்கு அவசர கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளேன்.
அதில் இவ்வாறு சட்டத்தை கையில் எடுத்து தன்தோன்றி தனமான முறையில் மீனவர்களை தாக்கிய காயம் விழைவித்த கடற்படையினரை சட்டத்தின் முன் நிறுத்தி தக்க நடவடிக்கை எடுப்பதுடன் பாதிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யவேண்டும். மேலும் இவ்வாறான சம்டபவம்ங்கள் மீண்டும் மீண்டும் வட பகுதியில் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
N5




