மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 200 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்த மன்னார் புனர்வாழ்வு அமையம்
மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மன்னார் புனர்வாழ்வு அமையம் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை நேற்று (13) சனிக்கிழமை காலை வழங்கி வைத்துள்ளனர்.
மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தட்சணா மருதமடு ம.வி பாடசாலையில் இன்று சாலை குறித்த நிகழ்வு இடம் பெற்றது. இதன் போது மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 200 மாணவர்களுக்கு குறித்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மடு தட்சணா மருதமடு ம.வி பாடசாலையின் அதிபர் அல்மேரா தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்விற்கு விருந்தினர்களாக மடு பிரதேசச் செயலாளர் எப்.சி.சத்தியசோதி,மன்னார் புனர்வாழ்வு அமையத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன்,உப தலைவர் செல்வி சாந்தினி கஸ்மீர்,செயலாளர் அமல்ராஜ் பெர்ணாண்டோ ஆகியோர் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பெறுமதி வாய்ந்த கற்றல் உபகரணங்கள் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.


தரம் 1 முதல் உயர்தரம் வரை கல்வி கற்கும் மாணவர்களுக்கு இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டது.இதன் போது மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
(மன்னார் நிருபர்)




