செய்திகள்

வவுனியாவில் மீண்டும் புளொட் அமைப்பின் தலைமை அலுவலகம்

யுத்தம் நிறைவடைந்த கையுடன் மூடப்பட்டிருந்த புளொட் அமைப்பின் அலுவலகம் மீண்டும் வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாகிய தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) வவுனியா மாவட்டத்திற்கான தலைமை அலுவலகம் நேற்று புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா, கோவில்குளம் சிவன் கோவிலில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதன் பின்னர் கோவில்குளம், உமாமகேஸ்வரன் வீதியில் உள்ள உமாமகேஸ்வரன் இல்லத்துடன் இணைந்த வகையில் அமைக்கப்பட்ட தலைமை அலுவலக பெயர் பலகை தலைவரால் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டதுடன் அலுவலகத்தையும் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின பங்காளிக் கட்சியாகிய புளொட் அமைப்பைச் சேர்ந்த வடமாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், க.சிவனேசன், வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகர பிதா சந்திரகுலசிங்கம், புளொட் உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள், தமிழ் தேசிய இளைஞர் கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பெருமளவானோர் இதில் கலந்து கொண்டனர்.

DSC07065 DSC07051

N5