செய்திகள்

எமக்கு ஆதரவான சிங்களத் தலைமைகளுடன் இணைந்து செயற்படுவோம்: யாழில் சுமந்திரன்

எங்­க­ளு­டைய கோரிக்­கை­க­ளுக்கு ஆத­ர­வான பெரும்பான்மை தலை­வர்­க­ளோடு நாம் சேர்ந்து இயங்­கு­கின்றோம். இனியும் அவ்­வாறே இயங்­குவோம். அது எமது இலக்­கு­களை அடை­வ­தற்கு மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும் என தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் கட்­சியின் ஊடகப் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்­துள்ளார்.

யாழில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் வெளிவி­வ­கார அமைச்­ச­ருக்கும் சுமந்­தி­ர­னுக்­கு­மி­டை­யி­லான உறவு நிலை தொடர்­பாக பல முர­ணான கருத்­துக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றமை தொடர்­பாக கேள்­வி­யெ­ழுப்­பிய போதே அவர் இதனை தெரி­வித்தார். இது தொடர்­பாக அவர் மேலும் தெரிவிக்கையில் முக்கியமாகக் கூறியதாவது:

“தமிழ் தேசிய பிரச்­சனை தொடர்­பாக மங்­கள சம­ர­வீர கொண்­டி­ருக்கும் நிலைப்­பாட்டை நீண்ட கால­மாக அவ­தா­னித்து வந்­த­வர்­க­ளுக்கு அவ­ரது நிலை தெரியும். அவர் சிங்­கள தலை­வர்­களில் மிக தெளிவாக ஆட்சி அதி­காரம் பகி­ரப்­பட வேண்டும் என்­பதில் எவ் வித­மான சல­ன­மு­மில்­லாத கொள்­கையை உடை­யவர்.

சந்­தி­ரி­காவின் ஆட்சிக் காலத்தில் கூட அதி­கார பகிர்வு தொடர்­பாக திட்­டங்­களை கொண்டு வந்த போது அதற்கு சிங்­கள மக்­க­ளி­டைய ஆத­ரவை பெறு­வ­தற்­கான பணிகளில் ஈடு­பட்டிருந்தார். முன்­னைய பாரா­ளு­மன்­றத்­திலும் சரி தற்­போ­தைய பாரா­ளு­மன்­றத்­திலும் சரி போர்­குற்ற விட­யங்கள் தொடர்­பாக சாதா­ரண சிங்­கள தலை­வர்கள் கூட கூற தயங்­கு­கின்ற விட­யங்­க­ளையும் இவர் கூறி­யவர். இவ்­வாறு ஒரே நிலைப்­பாட்டில் பதில் கூறு­பவர் இவர். அவ்­வா­றான ஒரு­வ­ரோடு நாம் சேர்ந்து இயங்க வேண்டும்.

மேலும் பெரும்பான்மை தலை­வர்­களில் எங்­க­ளது கோரிக்­கை­க­ளுக்கு ஆத­ர­வா­ன­வர்கள் அதி­க­ளவில் இருக்க வேண்டும். அது மங்­கள சம­ர­வீ­ர­வாக இருந்­தாலும் சரி அல்லது வேறு யாராவது தலைவர்களாக இருந்தாலும் சரி அவ்வாறு உள்ளவர்களோடு நாம் சேர்ந்தே இயங்க வேண்டும். அது எங்களுடைய இலக்கை அடைவதற்கு மிகவும் முக்கியமான செயற்பாடக அமையும்” என்றார்.
R-06