ராவண பலய, சிஹல ராவய அமைப்புக்களின் தலைவர்கள் பொலிஸ் நிலையத்தில் சரண்
சிங்கள கடும் தேசியவாத அமைப்பு க்களான ராவனா பலய மற்றும் சிஹல ராவய ஆகிய அமைப்பு க்ககளின் அழைப்பாளர் மற்றும் தலைவர் ஆகியோர் ஹோமாகம காவல் நிலையத்தில் இன்று திங்கட்கிழமை மாலை சரணடைந்துள்ளனர்.
ராவனா பலய அமைப்பின் அழைப்பாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் மற்றும் சிஹல ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரட்ன தேரர் ஆகியோர் ஹோமாகம காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு, ஹோமாகம நீதிமன்றில் போராட்டம் நடத்தியதாக இந்த இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே இருவரும் சரணடைந்தனர்.
R-06




