செய்திகள்
பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா
கிளிநொச்சி பூநகரி பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பூநகரி பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா எதிர்வரும் 28ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இதற்கான ஏற்பாடுகள் கிளிநொச்சி மாவட்டச்செயலகம் மற்றும் பூநகரி பிரதேச செயலகம் ஆகியவற்றினூடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பாலைதீவுப்பகுதியில் மக்கள் இல்லாதபடியால் சகல விடயங்களையும் இங்கிருந்தே மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றும் இதற்கான கலந்துரையாடல் ஒன்று கடந்த 8ம் திகதி நடைபெற்றுள்ளது. அக்கூட்டத்தில் தீர்மானங்களுக்கு அமைவாக எதிர்வரும் 28ம் திகதி நடைபெறவுள்ள திருவிழாவிற்கான சகல ஏற்பாடுகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 28ம் திகதி நடைபெறவுள்ள திருவிழாவிற்கு 20ம் திகதியிலிருந்தே மக்கள் வருகை தருவார்கள் கடந்த ஆண்டு கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்;டிருந்தனர். இம்முறை இதைவிட அதிகளவான பக்தர்கள் வருகை தருவார்கள் என்றும் இவர்களுக்கான போக்குவரத்து வசதிகள் குடிநீர் வசதிகள் என்பவற்றை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் வலைப்பாடு பங்குத்தந்தை தெரிவித்துள்ளார்.
n10




