செய்திகள்

அமெரிக்கா செல்கின்றார் மங்கள சமரவீர: சமாதான முனைப்புக்கள் குறித்து விளக்குவார்

இலங்கையின் சமாதான முனைப்புக்கள் குறித்து வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமெரிக்காவிற்கு விளக்கம் அளிக்க உள்ளார். இதற்காக அமெரிக்காவுக்கான விஜயம் ஒன்றை அவர் விரைவில் மேற்கொள்ளவிருக்கின்றார்.

நீடித்து நிலைக்கக் கூடிய சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் புதிய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் முனைப்புக்கள் குறித்து அமெரிக்க அதிகாரிகளுக்கு, அமைச்சர் சமரவீர விளக்கம் அளிக்க உள்ளார். எதிர்வரும் வாரம் மங்கள சமரவீர அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 25ம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க சமாதான நிறுவக பேச்சுவார்த்தைகளில் அமைச்சர் பங்கேற்க உள்ளார். பொருளாதார அபிவிருத்தி உள்ளிட்ட அரசாங்கத்தின் சமாதான முனைப்பு பற்றி அறிவிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
R-06