தொட்டலங்க ஆர்ப்பாட்டம் நிறைவு
தொட்டலங்க பாலத்திற்கருகில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
பெர்கியுஸன் வீதியின் கஜீமா தோட்டத்தில் சட்டவிரோத வீடுகள் அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 24 மணித்தியாலத்திற்கும் அதிக காலம் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனையடுத்து கொழும்பின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் மேற்கொண்ட பேச்சுவார்த்தைய அடுத்து ஆர்ப்பாட்டத்தை முடிவிற்கு கொண்டு வருவதற்கு மக்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக கொழும்பு வடக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மக்களின் கோரிக்கை குறித்து இன்று நண்பகல் 12 மணியளவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
n10




