செய்திகள்

அனுமதி பெறாது கொண்டு செல்லப்பட்ட 27 ஆடுகளை மீட்ட ஈரப்பெரியகுளம் பொலிசார்!

அனுமதி பெறாது கொண்டு செல்லப்பட்ட 27 ஆடுகள் வவுனியா, ஈரப்பெரியகுளம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

முறைப்படியான அனுமதிப் பத்திரம் இல்லாது கப்ரக வாகனம் ஒன்றில் மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான 27 ஆடுகளை மிகிந்தலை நோக்கி கொண்டு சென்ற போது வவுனியா, ஈரப்பெரியகுளம், அளுத்கம பகுதியில் வைத்து பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட ஆடுகளை ஏற்றிச் சென்ற வாகன சாரதி மற்றும் அதன் உதவியாளர் இருவருக் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஈரப்பெரியகுளம் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

(2) (1)

N5