நேற்று முதல் மீன்பிடிக்க மீனவர்களுக்குத் தடை
எதிர்வரும் 20, 21ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவின் பாதுகாப்புக் கருதி, நேற்று 17ஆம் திகதி முதல் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் பகுதிகளை சேர்ந்த மீன்பிடிப் படகுகள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், நாட்டுப்படகு மீனவர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கச்சதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழா, 20ஆம் திகதி மாலையில் இடம்பெறும் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, இரவில் தேர்பவனி இடம்பெறுவதுடன் 21ஆம் திகதி காலை 9 மணிக்கு சிறப்புத் திருப்பலிப் பூஜையுடன் திருவிழா நிறைவுபெறும்.
யாழ்ப்பாணம் மறை மாவட்டம் சார்பில் நடத்தப்படும் இந்தத் திருவிழாவில், இலங்கை மற்றும் தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
n10




