தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு கடிதம்
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் சக்திவேல் உள்ளிட்ட குழுவினர், கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) இந்த கடிதத்தை ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவ் அமைப்பின் ஏற்பாட்டாளர் சக்திவேல்-
நீதிமன்ற செயற்பாடுகளின் ஊடாகவே அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமென, அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வடக்கிற்குச் சென்று கூறியிருந்தார். ஆனால், ஐ.நா ஆணையாளரின் குறித்த கூற்றினை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்காக அமைப்பு என்ற ரீதியில் நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
இந்த கூற்றானது, ஜனாதிபதியின் நிலையை நாட்டிற்கு சொல்லும் கூற்றாகவே காணப்படுகிறது. ஜனாதிபதியின் நிலைப்பாட்டைத் தான் ஐ.நா ஆணையாளர் மக்களுக்கு கூறியுள்ளார். அதற்கு ஒத்து ஊதுவதாக வட மாகாண முதலமைச்சரும் எதிர்க்கட்சி தலைவரும் சார்பான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள். அவர்களின் கூற்றுக்களையும் நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் என்றார்.
N5




