இந்தியாவுடன் பொருளாதார உடன்படிக்கை வேண்டாம்: அழுத்தம் கொடுக்கிறது ஹெல உறுமய
இந்தியாவுடன் பொருளாதார தொழில்நுட்ப ஓத்துழைப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் திட்டத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள ஜாதிஹ ஹெல உறுமய, குறிப்பிட்ட உடன்படிக்கை இந்தியாவிற்கே சாதகமானது எனவும் தெரிவித்துள்ளது.
சேவை துறையை வெளிநாட்டு நிறுவனங்களிற்காக திறப்பது நாட்டிற்கு மிகவும் ஆபத்தானது,குறிப்பிட்ட உடன்படிக்கை குறித்துநாட்டிற்குள் தீவிர கலந்துரையாடல்கள் இடம்பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ள ஜாதிஹ ஹெல உறுமய வெளிநாட்டுடன் கண்மூடித்தனமாக ஓப்பந்தங்களில் கைச்சாத்திடுவதால் உள்நாட்டில் குழப்பகரமான சூழல் உருவாகலாம் எனவும் தெரிவித்துள்ளது.
R-06




