செய்திகள்

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தமிழ் முஸ்லிம் என்கின்ற பிரச்சினையை எடுக்கவேண்டாம்

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தமிழ் முஸ்லிம் என்கின்ற பிரச்சினையை எடுக்கவேண்டாம் . இரண்டு தனிப்பட்ட மனிதர்கள் சண்டையிடுகிறார்கள் என்று சொன்னால் அது அவர்களுடைய தனிபட்ட விடயம்.
எனவே அவ்வாறான நேரங்களில் தூரநோக்கோடு செய்படவேண்டும். ஒரு தமிழ் இளைஞன் ஒரு இஸ்லாமிய இளைஞனோடு சண்டையிடுகிறான் என்றால் சரி பிழை பார்க்காது இரண்டு பகுதியிலும் திரண்டு நிற்போம் என்று சொன்னால்இ எதிர்காலத்தில் பல்வேறு பாரதூரமான விழைவுகள் ஏற்படப்போகிறது இவ்வாறு தெரிவித்தார் வட மாகாண கடற்றொழில் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன்.
மன்னாரில் முருங்கன் பேருந்து நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் தலைமையுரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில்;
அணைத்து இனங்களும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். தனிப்பட்டவர்களிடையோ ஏற்படும் சண்டைகளை கட்டுப்படுத்த சட்டம் இருக்கின்றது. எனவே பிழை செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும்.
எனவே ஒரு  நிமிடம் சட்டம் செயற்படவில்லை என்று சொன்னார் நாடே நரகமாகிவிடும். சட்டங்கள் நிறைவே உண்டு ஆனால் எமது மக்கள்தான் அதனை கடைப்பிடிப்பதில்லை .
எம் முன் இருக்கின்ற எதிர்கால பிரச்சிணைகளை தீர்க்கவேண்டும் என்று சொன்னால் சரிபிழை அறிந்து செயற்படவேண்டும் .
பசி பணட்டினி மூவின மக்களுக்கும் ஒரே மாதிரிதான் இருக்கும் எனவே பின்தங்கிய கிராமங்களுக்கு அபிவிருத்திகளை கொண்டு செல்லும்போது அயல் கிராமத்தவர்கள் விட்டுகொடுப்போடு வாழ பழகிக்கொள்ள வேண்டும்.
எனவே விட்டுகொடுக்கும் மனநிலைக்கு எப்போது நாம் மாறுகின்றோமே அப்போதுதான் எமது மாகாணம் முன்னோக்கி நகரும் . எனவே எமது மக்கள் தூரநோக்கோடு செயற்படவேண்டும். ஒற்றுமையை காட்டியோழுப்புவோமேயானால் பல விடயங்களை நாம் சாதிக்க முடியும் என்றார்.
n10