செய்திகள்

வட மாகாண சபை பிழையான நெறிபடுத்தலில் செல்கிறது என்று யாரும் சொல்லிவிட முடியாது

வட மாகாண சபையை பொறுத்தமட்டில் பிழையான நெறிபடுத்தலில் செல்கிறது என்று யாரும் சொல்லிவிட முடியாது.
மாகாணசபையின் நிதிகள் திரும்பிபோவதாக பொய் பிரசாரங்களை மேற்கொள்கின்றனர். அதில் உண்மையில்லை, ஆனால் அதை நம்பக்கூடிய நிலை காணப்படுவதாக நாடளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைதலைவருமாகிய செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்
மன்னார் முருங்கன் பேருந்து நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்
 இன்றும்  வட பகுதியில் அடிப்படை பிரச்சினைகள் காணப்படுகிறது. அவ்வாறான நிலையில் அதனை நம்புகின்ற சூழ்நிலை காணப்படுகிறது.
கடந்த கால எங்களுடைய பிரச்சிணைகளை வெளிப்படையாக பேசிதீர்க்கவேண்டும். மன்னார் மாவட்டத்தை பெறுத்தமட்டில் தமிழ் முஸ்லீம் மக்களினுடைய உறவு என்பது பிரச்சினையாக காணப்படுவது கடந்த கால அனுபவங்களாக உள்ளது.ஆனால் எங்களுடைய இனங்கள் ஒன்றாக இணைந்து அபிவிருத்தி பணியை மேற்கொள்ளவேண்டும்.
குறிப்பாக மன்னாரிலே இரண்டு அமைச்சர்களை கொண்டிருக்கின்றோம். அதேபோன்று இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருக்கின்றோம். மாகாண சபையிலும் பலர் உள்ளனர் இந்நிலையில் எங்களுடைய மன்னார் மாவட்டம் இனியும் பின்தங்கிய மாவட்டம் என்று சொல்லக்கூடாது.
அபிவிருத்தி என்ன்பது மன்னார் மாவட்டத்திற்கு மிகவும் அவசியமாக காணப்hபடுகிறது.  வன்னி தொகுதியிலே பல மாவட்டங்களில் கிராமங்கள் அபிவிருத்தி அடைந்து வருகிறது. ஆனால் மன்னார் மாவட்டம் காடந்தகாலங்களில் இருந்ததுபோன்றே இன்றும் காணப்படுகிறது.
ஆகவே இவ் வருடம் துரிதகதியில் எங்களுடைய மாவட்டத்தை அபிவிருத்தி பாதையில் இட்டுசெல்லும் குறிக்கோளோடு செய்படவேண்டும்.குறிப்பாக ஐ.நாவில் இருந்து வருபவர்களோ இல்லது சர்வதேச தலைவர்களோ அல்லது உள்நாட்டு அமைச்சர்களோ எமது மன்னா ருக்கு வருவதில்லை.
ஆனால் யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களுக்கு சகல நாடுகளும் உதவிகளை வழங்கிவருகிறது. ஆனால் பாதிக்கப்பட்ட வன்னி மாவட்டத்திற்கு அவர்களது பார்வை இல்லாதிருப்பது கவலையளிக்கும் விடயம்.ஆகவே பாதிக்கப்பட்ட இடங்களுக்கு தான்  அவர்கள் வந்து பார்க்கவேண்டும். இதில் நான் பிரதேச வாதம் பேசவில்லை. எனவே எங்களுடைய மாவட்டத்திற்கு அவ்வாறான தவறுகள் நடைபெறகூடாது என்பது எங்களுடைய கருத்து.
ஆகவே எமது வன்னிமாவட்டம் மன்னார் மாவட்டமும் அபிவிருத்தியடைந்த மாவட்டமாக மாறவேண்டும் என்றார்.
n10