செய்திகள்

வட மாகாணத்திலுள்ள பல பிரதேசங்களில் கண்ணிவெடிகள் அகற்றல்

வட மாகாணத்தில் மேலும் 63 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் நிலக் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

நாகர் கோயில், முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி மற்றும் கிளாலி ஆகிய பகுதிகளில் நிலக் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார்.

எல்.ரீ.ரீயினரால் 2064 சதுர கிலோமீற்றர் பரப்பளவிற்கு நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தாக இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இராணுவத்தினர் மற்றும் சர்வதேச அமைப்புக்கள் இணைந்து நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

 n10