செய்திகள்

ஷிராணிக்கு விடுதலை

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக இடம்பெற்று வந்த வழக்கில் இருந்து விடுதலை பெற்றுள்ளார்.

தனது சொத்து விபரங்களை சரியான முறையில் வௌிக்காட்டவில்லை எனக்கூறி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை குறித்த வழக்கில் இருந்து விடுவித்ததாக நீதிபதி உத்தரவிட்டார்.

இன்றைய விசாரணை நடவடிக்கையின் போது ஷிராணி பண்டாரநாயக்க தரப்பினால் முன் வைக்கப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்ததன் பின்னர் குறித்த குற்றப் பத்திரிகையை வாபஸ் பெறுவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றில் தெரிவித்தது.

அத்துடன் நீதிமன்ற கட்டுப்பாட்டில் இருந்த அவருடைய கடவுச்சீட்டையும் விடுவிப்பதற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

n10