வட மாகாண புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே இன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்
வட மாகாணத்திற்கான புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வு யாழ்ப்பணத்தில் அமைந்துள்ள வட மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
சர்வமத வழிபாடுகளின் பின்னர் வடமாகாண ஆளுநராக ரெஜினோல்ட் குரே தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
ஆளுநர் கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வில் தேசிய கீதம் சிங்கள மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் பாடப்பட்டுள்ளது .
n10




