வட மாகாண புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே இன்று கடமைகளை பொறுப்பேற்றார்
வட மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் ரெஜினோல்ட் குரே இன்று யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
வடமாகாண ஆளுநரின் கடமையேற்கும் நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நல்லாட்சி அரசாங்கத்தால் வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்த எச்.ஏ.ஜி.எஸ்.பளிஹக்கார தனது ஓய்வை அறிவித்ததை தொடர்ந்து ரெஜினோல் குரே வடக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் கடந்த 14 ஆம் திகதி சத்தியப்பிரமாணம் செய்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்த எச்.ஏ.ஜி.எஸ்.பளிஹக்கார, தாம் ஓய்வுபெறுவதாக அண்மையில் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்தார். அதனை தொடர்ந்து ரெஜினோல் குரே வடக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
R-06




