திருக்கேதீஸ்வரம் கிணற்றை ஏப்ரல் 4ம் திகதி அகழ்வு செய்ய உத்தரவு
மன்னார் திருக்கேதீஸ்வரம் கிணறு தொடர்பாக வழக்கு மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி ஆசிர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜ முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை (19) எடுத்துகொள்ளப்பட்டபோது வழக்கிணை விசாரித்த நீதிபதி வழக்கிணை ஏப்ரல் மாதம் 4ம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன், அன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட சந்தேகத்திற்கு இடமான கிணறு அமைந்துள்ள பகுதியில் தொடார்ச்சியாக நான்கு நாட்கள் மனித எச்சங்களை அகழ்வதற்கு உத்தரவிட்டார்.
கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் திகதி மாந்தை திருக்கேதீஸ்வரம் பகுதியில் வீதிக்கு அருகில் நிலத்திற்கடியில் குடி நீர் குழாய்கள் பதிக்கப்பட்டபோது அங்கு மனித எச்சங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதணை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக 32 தடவைகள் அகழ்வு செய்ததில் 82 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளபட்டிருந்தது இதேவேளை குறித்த பகுதியில் உள்ள கிணறு சம்பந்தமாக சந்தேகம் வெளிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கிணற்றிணை இன்று அகழ்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு மன்னார் மாவட்ட நீதிமன்றில் இன்று எடுத்துகொள்ளப்பட்டது.
இதன்போது மன்னார் திருக்கேதீஸ்வரம் அண்டிய மாந்தை பகுதியிலே ஏற்கனவே கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பான விசாணை சம்பந்தமான அறிக்கை மன்னார் நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதேபோல சென்ற தவணையிலே புதைகுழி;யை அண்டிய பகுதியிலே உள்ள கிணற்றினுள்ளோ மனித எச்சங்கள் இருக்ககூடும் என்கின்ற அச்சப்பாடு இருப்பதனால் அதணையும் தோண்டவேண்டும் என்கின்ற விண்ணப்பம் காணமல்போணோர் தரப்பிலே ஆஜராகிய சட்டத்தரணிகளினால் முன்வைக்கப்பட்டிருந்தது.
குறித்த வேண்டுகோளின் அடிப்படையில் அப் பகுதியில் உள்ள கிணறு அடையாளம் காணப்பட்டிருந்தது. ஏற்கனவே அரச தரப்பினரால் அவ்விடத்தில் கிணறு இல்லை என்று கூறப்பட்டிருந்தும், பின்னர் காணாமல்போணோர் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணிகளினால் நீதிமன்றத்தின் ஊடாக கிணறு அடையாளம் காணப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் இன்று வெள்ளிக்கிழமை குறித்த கிணற்றிணை தோண்டுவதற்காக குறித்த அதிகாரிகளுக்கு தோண்டும் உபகருணங்களுடன் வரும்படியாகவும், அதை தோண்டினால் அதனுள்ளோ எச்சங்கள் இருப்பின் அதணை முறையாக வெளிகொண்டுவருவதற்கான சம்பந்தபட்ட திணைக்களங்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆனாலும் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அந்த கிணற்றிணை அண்டிய பகுதியிலே நீர்நிறைந்திருப்பதினால் அதணை இன்று அகழ்வதற்கு வாய்ப்பு இல்லை என்பதினால் அவ்விடத்தில் நீர் நிரம்பி காணப்படுவதாகவும் அதணை தோண்டுவதில் சிக்கல் உண்டு எனவும்; அதணை தோண்டியனாலும் மனித எச்சங்களை கண்டுபிடிப்பதில் பிரச்சிணைகள் இருக்கும் என்னபதினால் அந்த பகுதியில் நீர் வற்றியபின் அகழ்விணை செய்யலாம் என மன்றுக்கு கோரியிருந்தார்.
இருப்பினும் காணாமல்போணோர் தொடர்பாக ஆஜராகிய சட்டத்தரணிகளின் விண்ணப்பதிற்கு அமைவாக மன்னார் நீதவான் கிணறு உள்ள பகுதியிணை பார்வையிட்டு அப்பகுதியிலும்; கட்டளை பிறப்பித்திருந்தார்
அதன்படி வெள்ள நீர் மேலும் வராமல் இருக்க குறித்த கிணற்று பகுதியிணை சுற்றி ஒரு அணையிணை கட்டி தற்பொழுது இருக்கும் வெள்ள நீரை அகற்றி விட்டு அதணை காய செய்து எதிர்வரும் ஏப்பரல் மாதம் 4ம் திகதி அதணை அகழ்கின்ற பணியிணை மேற்கொள்ளவேண்டும் என கட்டளை பிறப்பித்தார்.
இதேவேளை அங்கு அஜராகியிருந்த கிராமசேவகரிடம் குறித்த கிணறு உள்ள பகுதியில் மக்கள் வாழ்ந்ததிற்கான ஆதாரம் உண்டா என நீதவான் வினவியபோது உண்டு என்று பதிலழித்திருந்தார். இந்நிலையில் குறித்த ஆதாரங்களை நீதிமன்றில் சமர்ப்பிக்கும்படி கட்டளை பிறப்பித்திருந்தார். அதன் பிரகாரம் இவ் வழக்கு ஏப்ரல் மாதம் 4ம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன்,அன்றைய தினத்தில் இருந்து தொடர்ச்சியாக நான்கு நாட்கள் மனித எச்சங்களை கண்டெடுக்கும் அகழ்வு மேற்கொள்ள உத்தவிரவிட்டார்.
குறித்த விசாரணைகளின் போதுஇ காணாமல் போனவர்கள் சர்பாக கொழும்பில் இருந்து சட்டத்தரணிகளான ஜீ.ராஜ குலேந்திரம்இ வி.எஸ்.நிரஞ்சன் மற்றும் மன்னார் சட்டத்தரணிகள் சங்கம் சார்பாக சட்டத்தரணிகளான எம்.சபூர்தீன்இ பிரிமூஸ் சிஙாய்வாஇ லோகு ஆகியோர் மன்றில் பிரசன்னமாகியிருந்தனர்.






