செய்திகள்

மன்னார் பக்தர்கள் கச்சத்தீவு பயணம்……!

கச்சத்தீவு புனித அந்தோனியார் பெருவிழாவை முன்னிட்டு மன்னார் பகுதியிலிருந்தும் வழமைபோன்று பக்தர்கள் கூட்டம் படகுகளின் மூலம் இன்று சனிகிழமை(20) கச்சதீவுக்கு  புறப்பட்டனர்.

கடல் சற்று பாதகமாக இருந்ததால் இம்முறை பக்தர்கள் கூட்டம் மன்னார் பகுதியிலிருந்து புறப்பட்டது வழமையைவிட குறைவாக காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாளை ஞாயிற்றுக்கிழமை கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இடம்பெறுகிறது. இலங்கை இந்திய நாட்டிலிருந்து சுமார் ஏழாயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ் திருவிழாவை முன்னிட்டு மன்னார் பகுதியிலிருந்தும் குறிப்பாக தலைமன்னார் கிராமம்இ தலைமன்னார் பியர்இ பேசாலைஇ பள்ளிமுனை ஆகிய கடற்கரை பகுதியிலிருந்தும் பக்தர்கள் கூட்டம் குடும்பமாகவும் நண்பர்களாகவும் புறப்பட்டுள்ளனர்.

பயணத்துக்கு கடல் சற்று கொந்தளிப்பாக இருந்தமையால் அதிகமான பக்தர்கள் குடும்பமாக செல்வதில் தயக்கம் காட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதன் பாதுகாப்பைக் கருதி ஒரு படகில் பத்துபேருக்கு மேல் பயணிக்க வேண்டாம் என கடற்படையினர் படகோட்டிகளுக்கு அறிவுத்தல் வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கச்சத்தீவு சென்றவர்களின் பெயர் விபரம் மற்றும் செல்லும் படகுகளின் விபரங்களை ஓரிரு கடற்கரை கடற்படை பாதுகாப்பு சாவடியில் கையளித்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. சில இடங்களில் பக்தர்கள் படகுகளில் சுயமாக சென்றதாகவும் தெரிவித்தனர்.

நன்பகலுக்கு பின் கடல்கொந்தளிப்பு சற்று உரமாக மாறும் என்ற ஐயப்பாட்டால் அதிகாலையிலே அதிகமான படகுகள் கச்சத்தீவை நோக்கி பயணித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஒரு பயணிக்கு மன்னாரிலிருந்து கச்சத்தீவுக்கு சென்றுவர 1000 ரூபா தொடக்கம் 2000 ரூபா வரை அறவிட்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

N5image-8fb59613b0613c162782b7ac9b9c23d8e1e261f80c5bf965039471d0a3810c5b-V copy image-1311af4eb2bce4fb6c37be241016f54e7098efc5fa80dcd665b058507241fb54-V copy image-107326db0929c9ec82b44ec7c69e7200f4e19c32f269054183cf710c7abd1359-V copy