செய்திகள்

நான்கு பௌத்த பிக்குகள் விளக்கமறியலில்

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நான்கு பௌத்த பிக்குகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பியகம சுசிம தேரர், பிட்டிகல தம்மவினீத தேரர், மதுவாகல தம்மசிறி தேரர், கிரம தேவிந்த தேரர் ஆகிய நான்கு தேரர்களே எதிர்வரும் மார்ச் 01ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் நால்வரும் நேற்று மாலை ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கலகொடஅத்தே ஞானசார தேரர் கடந்த மாதம் 26ம் திகதி ஹோமாகம நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதன் பின்னர் பௌத்த தேரர்கள் சிலர் அவ்விடத்தில் கலகத்தில் ஈடுபட்டிருந்தனர்.

n10