செய்திகள்

ஜனாதிபதி மைத்திரி நாளை யாழ். விஜயம்: சாரணர் ஜம்பொறியில் பங்குகொள்வார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜேர்மன் மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி, இன்று ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பவுள்ளார்.

இந்நிலையிலேயே ஜனாதிபதி நாளை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இங்கு அவர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெற்றுவரும் சாரணர் ஜம்பொறி நிகழ்வில் கலந்துகொள்வார்.

இந்த விஜயத்தின்போது, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஆகியோரை ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.
R-06