செய்திகள்

மலையாளப் படங்களில் என்னை ஏமாற்றினார்கள் – பூர்ணா பேட்டி

தனது வீட்டில் மணமகன் தேடும் படலம் வேகமாக நடந்து வருவதாக நடிகை பூர்ணா கூறினார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:மலையாளத்தில் அறிமுகமானேன். தமிழ், தெலுங்கு போல நல்ல வேடங்கள் அங்கு கிடைப்பதில்லை.

நல்ல வேடம் என்று முதலில் கூறுவார்கள். படப்பிடிப்புக்குச் சென்றால் சிறிய வேடம் தருவார்கள். ஒப்பந்தம் இருப்ப தால் அதில் நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

பல மலையாள படங்களில், முக்கிய வேடம் என்று சொல்லி என்னை ஏமாற்றி உள்ளனர்.

இது வருத்தத்தை அளித்தது. தெலுங்கு படம் ஒன்றில் பேய் வேடத்தில் நடித்தேன்.

அதைப் பார்த்துவிட்டு அதிர்ச்சியில் ஒருவர் இறந்துவிட்டதாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

அதில் எந்தவித உண்மையுமில்லை. இதே போல ஒரு படத்தில் கர்ப்பிணி வேடத்தில் நடித்தேன். அந்தப் புகைப்படத்தைப் பயன்படுத்தி, நான் கர்ப்பி ணியாக இருப்பதாகத் தவறானத் தகவல்களைப் பரப்பினர்.

இதுபோன்ற உண்மைக்கு மாறான தகவல்களைப் பரப்பும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்குத் தடை விதிக்கவேண்டும் என்று யாராவது குரல்கொடுத்தால், அவர்களுக்கு நான் உதவுவேன்.

உயிரோடு இருப்பவர்களைக் கொல்லும் செயலைத்தான் பேஸ்புக்கில் செய்துவருகின்றனர்.இந்த வருடத்தில் எனது திருமணத்தை நடத்த வேண்டும் என வீட்டில் தீவிர முயற்சியில் உள்ளனர்.

எனக்காக மணமகன் தேடும் படலம் நடைபெற்று வருகிறது. என்னையும் என் குடும்பத்தையும் நேசிக்கும் ஒருவர்தான் மணமகனாக வர வேண்டும் என நினைக்கிறேன். இவ்வாறு பூர்ணா தெரிவித்துள்ளார்.

 

N5