செய்திகள்

இனி தனி ஹீரோவாக நடிப்பேன்- ஸ்ரீ

‘வழக்கு எண் 18/9’ படத்தில் அறிமுகமானவர், ஸ்ரீ . பிறகு ‘ஓநாயும்  ஆட்டுக்குட்டியும்’, ‘சோன்பப்டி’, ‘வில் அம்பு’ படங்களில் நடித்தார்.
அவர்  கூறியதாவது:நான் அறிமுகமான படமே எனக்கு பெரிய அங்கீகாரத்தை  கொடுத்தது.

இயக்குனர் பாலாஜி சக்திவேல், மிஷ்கின் இருவரும்தான் என்னை உருவாக்கினார்கள்.

‘வழக்கு எண் 18/9’ படத்தில் என் நடிப்பைப் பார்த்த சுசீந்திரன், ‘வில்  அம்பு’ படத்தில் நடிக்கும் வாய்ப்பைக் கொடுத்தார்.

கோயம்புத்தூரில் உள்ள குடிசைப் பகுதியில் வாழும் இளைஞன் கேரக்டர் என்றவுடன்,  இயக்குனருடன் கோவை சென்று, சம்பந்தப்பட்ட இடங்களை நேரில் பார்த்து,  அங்குள்ள மக்களின் வாழ்க்கையைப் பற்றி தெரிந்துகொண்டேன்.

பிறகு ரிகர்சல்  பார்த்தேன். சண்டைக் காட்சிகளில் நிஜமாகவே அடிவாங்கி நடித்தேன்.

பலமுறை  உடலில் காயம் ஏற்பட்டது. ஆனால், படம் ரிலீசான பிறகு கிடைத்த பாராட்டு அந்த  வலியை மறக்கச் செய்துவிட்டது. இதுவரை இயக்குனர்களின் படம், இரண்டு  ஹீரோக்களின் படங்களில் நடித்து வந்தேன். அதன்மூலம் தனி ஹீரோவாக  நடிப்பதற்கான தகுதியை வளர்த்துக் கொண்டேன். இனி தனி ஹீரோவாகவும் நடிப்பேன்.  அடுத்து ‘மாநகரம்’ என்ற ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தில் நடிக்கிறேன்.

இவ்வாறு ஸ்ரீ  கூறினார்.

 

N5