செய்திகள்

சிறந்த நல்லிணக்க செயற்பாடு…… இலங்கையில்….

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில், இலங்கை மேற்கொண்டுவரும் செயற்பாடுகள் திருப்திகரமாகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும் உள்ளதாக ஆஸ்திரியா தெரிவித்துள்ளது.

இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஆஸ்திரியா சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்நாட்டு ஜனாதிபதி ஹயின்ஸ் பிஷர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களுடன் சந்திப்பை நடத்தியிருந்தார். இதனையடுத்து இரு நாட்டு தலைவர்களும் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஆஸ்திரிய ஜனாதிபதி மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.

அத்துடன், இருதரப்பு வர்த்தக நடவடிக்கைகளின் ஊடாக கடந்த சில வருடங்களில் இடம்பெற்ற அபிவிருத்தி தொடர்பில் திருப்தியடைவதாக குறிப்பிட்ட ஆஸ்திரிய ஜனாதிபதி, எதிர்காலத்தில் வர்த்தக மற்றும் சுற்றுலா நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த சந்தர்ப்பம் உள்ளதாக குறிப்பிட்டார்.

இதேவேளை, ஆஸ்திரியா போன்ற நட்பு நாடுகளுடன் இணைந்து நீண்ட தூரம் பயணிப்பதே இலங்கையின் எதிர்பார்ப்பென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றத்தின் ஊடாக இரு நாடுகளும் நெருங்கி செயற்படுவதாகவும் வர்த்தக மற்றும் விற்பனைத் திறனை எதிர்வரும் வருடங்களில் மேம்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரி குறிப்பிட்டார்.

இலங்கையின் தேயிலை ஆஸ்திரியாவில் பிரபலமடைந்து வருவதுடன், ஆஸ்திரிய சுற்றுலாப்பயணிகளின் கவனத்தை இலங்கையின் ஆயுர்வேதம் ஈர்த்துள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரி இதன்போது குறிப்பிட்டார். இந்நிலையில், குறித்த துறைகளில் அதிக முக்கியத்துவம் வழங்கி இரு நாடுகளதும் நட்புறவை மேலும் வலுப்படுத்திக்கொள்ள விரும்புவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

N5