செய்திகள்
ஆனந்தசங்கரியின் ‘நீங்கள் அறிந்ததும் அறியாததும்’ நூல் வெளியீட்டு விழா
கிளிநொச்சியில் மூத்த அரசியல் வாதியும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவருமான வீ.ஆனந்தசங்கரி அவர்களின் நீங்கள் அறிந்ததும் அறியாததும் எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றுள்ளது.
மூத்த அரசியல்வாதியும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவருமான வீ.ஆனந்தசங்கரி அவர்களின் நீங்கள் அறிந்ததும் அறியாததும் தந்தை செல்வாவும் நானும் என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று பிற்பகல் 3.00 மணிக்கு கரைச்சிப்பிரதேச மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
நூலின் முதற் பிரதியினை வணபிதா துரைரட்ணம் அவர்கள் வெளியிட்டு வைக்க அதன் முதற் பிரதியினை தமிழருவி சிவகுமார் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து சிறப்பு பிரதிகள் வழங்கப்பட்டன. நூலின் ஏற்புரையினை வீ.ஆனந்தசங்கரி அவர்கள் நிகழ்த்தினார்.
தனது இருபதாவது வயதில் அரசியல் பயணத்தில் கால்பதித்து தற்போது 82 வயதை தாண்டியும் அரசில் வழியில் தமிழர் அரசியல் உரிமைகளுக்காக பயணித்துக் கொண்டிருக்கும் ஓர் முது பெரும் அரசியல் வாதியொன்று குறிப்பிடத்தக்கது.
n10






