செய்திகள்

யாழ். மத்திய கல்லூரி சாரண இயக்க 100 ஆம் ஆண்டு விழா சின்னம் வெளியீடு

முதலாவது யாழ்ப்பான சாரணர் துருப்பு என்று அழைக்கப்படும் யாழ் மத்திய கல்லூரி சாரணர் குழு இவ்வாண்டு அதன் 100 ஆவது ஆண்டு நிறைவை மிகவும் சிறப்பான முறையில் கொண்டாட இருக்கின்ற நிலையில், 100 ஆவது ஆண்டு நிறைவு சின்னம் அண்மையில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

ரொமைன் மண்டபத்தில் கடந்த 8 ஆம் திகதி நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்லூரி அதிபர் எஸ். கே எழில்வேந்தன் இந்த சின்னத்தை வெளியிட்டு வைத்தார்.

1907 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ரொபெர்ட் பேடன் பவல் என்பவரால் உலகில் முதன்முறையாக எ அறிமுகம் செய்து வைக்கப்பட்ட சாரண இயக்கம் 1912 ஆம் ஆண்டு இலங்கையிலும் பின்னர் 1916 ஆம் ஆண்டு யாழ்ப்பணத்தில் யாழ் மத்திய கல்லூரியில் அப்போதைய அதிபர் வணக்கத்துக்குரிய இ. ரி செல்பியினால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

20 21 22 23 24 25